யன்தாராவும்-விக்னேஷ்சிவனும் இன்னும் அதிகாரப்பூர்வமாக "குடும்பஸ்தர்' ஆகவில்லை. ஆனாலும் தமிழ்ப் புத்தாண்டையும், மலையாள புத்தாண்டையும் சிவனின் குடும்பத்தினரோடு இணைந்து கொண்டாடியிருக்கிறார் நயன்தாரா.

ணிரத்னத்தின் "காற்று வெளியிடை', "செக்கச் சிவந்த வானம்' படங்களின் நாயகியான அதிதிராவ், சினிமாவுக்குள் வருவதற்கு முன்பே சத்யதீப் மிஸ்ரா என்கிற நடிகருடன் திருமணமாகி "குடும்பஸ்தர்' ஆகி... பிறகு விவாகரத்தும் ஆனதை இப்போது தெரிவித்திருக்கிறார்.

ஸாண்டல்வுட்டில் அறிமுகமாகி, டோலிவுட்டில் பிரபலமாகி, கோலிவுட்டில் கார்த்தியுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ராஷ்மிகா, அடுத்து சிவகார்த்தியின் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

ராஷ்மியும் கன்னட நடிகர் ரஷித்தும் சேர்ந்து நடித்தபோது காதல் உண்டாகி... "குடும்பஸ்தர்' ஆவதற்காக திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் தொடர்ந்து பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு ராஷ்மிக்கு வருவதை ரஷித் விரும்பவில்லை. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொண்டாராம் ராஷ்மிகா. நிச்சயதார்த்த முறிவுக்கான காரணத்தை இப்போது தெரிவிக்கிறது ராஷ்மி தரப்பு.

Advertisment

t

"பாகுபலி' ராஜமௌலி அடுத்ததாக ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருவரின் கதையை "ஆர்.ஆர்.ஆர்' என்ற பெயரில் படமாக்கி வருகிறார். சிரஞ்சீவி மகன் ராம்சரண், என்.டி.ஆர். பேரன் ஜூனியர் என்.டி.ஆர்., பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கான், கோலிவுட் நடிகர் சமுத்திரக்கனி, பாலிவுட் நடிகை ஆலியாபட் ஆகியோர் நடித்து வருகிறார்கள். பிரிட்டிஷார் ஆண்ட காலத்து கதை என்பதால் இங்கிலாந்து நடிகை டெய்ஸி ஜோன்ஸ் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாததால்.. படத்திலிருந்து விலகிக்கொண்டார். பிரிட்டிஷ் பெண்ணான... இந்திய சினிமாவில் பிரபலமான "மதராச பட்டணம்' எமியை நடிக்க வைக்க திட்டமிட்டார் ராஜமௌலி. ஆனால் காதலருடன் குடும்பம் நடத்திவரும் எமி, இப்போது கர்ப்பமாக இருப்பதால் எமியையும் நடிக்க வைக்க இயலவில்லை.

தீபிகா படுகோனேவும், ரன்வீரும் கடந்த ஆண்டு "குடும்பஸ்தர்' ஆனார்கள். குடும்பஸ்தி ஆன குஷியில் தீபிக்கு மெல்லிய தொப்பை விழ... "கர்ப்பம்... கங்கிராஜுலேஷன்' எனச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ""கல்யாணம் ஆன உடனே "ஏன் இன்னும் கர்ப்பமாகல?'னு கேக்கக்கூடாது, அதது நடக்கும்போது நடக்கும்'' என விளக்கம் சொல்லியுள்ளார் தீபி.

"குடும்பஸ்தர்' ஆனபிறகு சமந்தா-சைதன்யா தம்பதி சேர்ந்து நடித்த "மஜ்லி' படப்பிடிப்பின்போது... எமோஷலான ஒரு காட்சியில் "தன் கணவர் நடித்தது திருப்தியில்லை' என கணவரை திட்டினாராம் சமந்தா. படம் ஹிட்டாகியுள்ள நிலையில்... ""அந்தக் காட்சியில் என்னைவிட என் கணவர் சிறப்பான ரியாக்ஷனை வெளிப்படுத்த வேண்டும் என்கிற ஆசையில்தான் அவரை திட்டி... நடிக்க வைத்தேன்'' எனச் சொல்லியுள்ளார் சமந்தா.

-ஆர்.டி.எ(க்)ஸ்